வெடிகுண்டு மிரட்டல் – தாஜ் ஓட்டல் முன் குவிக்கப்பட்ட போலீஸ்

347

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மும்பை தாஜ் ஓட்டல் மற்றும் அதனை சுற்றி பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு படையினர் உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மும்பையில் உள்ள தாஜ் ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் கராச்சி பகுதியில் இருந்து வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து தாஜ் ஓட்டல் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஓட்டல் பகுதியை சுற்றி சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருந்தால் அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். எந்தஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of