பட்டப்பகல்..பரபரப்பான “ரிச்சி தெரு” பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு.. அரிவாள் வெட்டு.. கும்பல் வெறிச்செயல்..!

253

 சென்னையின் ரிச்சி தெரு அருகில் ரவுடி சேகரின் 3-வது மனைவியை ஒரு கும்பல் வெடிகுண்டால் வீசியும், அரிவாளால் வெட்டியும் கொல்ல முயற்சித்துள்ளது. பட்டப்பகலில் அறங்கேறிய இந்த சம்பவம் சென்னையில் மிகுந்த பரபரப்பை தந்து வருகிறது.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையையொட்டி, சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் பலமாக உள்ளன. அதனால் ஏர்போர்ட் முதல், மாமல்லபுரம் வரை உள்ள சாலைகளில் தீவிர சோதனை, பாதுகாப்பு, ஆய்வு, என பரபரத்து காணப்படுகிறது.

அதாவது திபெத் நாட்டினர் யாராவது வேலை பார்த்து வந்தாலோ, எங்காவது லாட்ஜ்களில் தங்கியிருந்தால்கூட உடனே தங்களுக்கு சொல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்த அளவுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பின்பிடியில் சென்னை இருக்கும்போதுதான் வெடிகுண்டு வீசி ரவுடி குடும்பத்தை அரிவாளால் வெட்டிய சம்பவம் நடந்துள்ளது.


மவுன்ட் ரோடில் ரிச்சி தெருவில்தான் இந்த பயங்கரம் நடந்துள்ளது. காலை முதல் இரவு வரை பரபரப்பாக இருக்கக்கூடியதுதான் இந்த ரிச்சி தெரு. யார் வேண்டுமானாலும் வந்து செல்லக்கூடிய வர்த்தக தெரு இது. ஒரு ரவுடியின் இளம் மனைவியை கொலை செய்வதற்காக ஒரு கும்பல் ஆட்டோவில் வந்துள்ளது.

இன்று பிற்பகல் 1 மணி இருக்கும். ரவுடியின் மனைவி அவரது சொந்தக்காரருடன் ரிச்சி தெரு அருகே அதாவது காஸினோ தியேட்டர் எதிரே நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது தான் அந்த கும்பல் ஆட்டோவில் பின் தொடர்ந்து வந்தது. மொத்தம் 6 பேர் ஆட்டோவில் இருந்து இறங்கினர். அந்த பெண்ணின் மீது நாட்டு வெடிகுண்டை அவர்கள் வீசினர். இதனால் அங்கிருந்த மக்கள் கூட்டம் அலறி அடித்து சிதறி ஓடினர்.

ஆனாலும் அந்த கும்பல், ஆத்திரம் அடங்காமல், பின்னாடியே போய் அந்த பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்தது. ஜனநெருக்கடி அங்கு அதிகமாக இருந்ததால், அந்த பெண் கூட்டத்துக்குள் ஓடி தப்பினார்.

அதேபோல, அந்த கும்பலும் வந்த ஆட்டோவிலேயே ஏறி தப்பி விட்டது. இதில், சம்பந்தப்பட்ட ரவுடி மனைவி உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் இப்போது அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்

அதிபர் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில்.. பட்டப்பகலில் அதுவும் ரிச்சி தெருவில் நடந்த இந்த கொலை முயற்சியால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் விசாரணையில் குதித்துள்ளனர்.

அரிவாள் வெட்டு விழுந்த பெண் ரவுடி சேகரின் 3-வது மனைவியாம். எனினும் யார் இந்த சேகர், அவரது 3-வது மனைவியை கொல்ல வந்த இந்த கும்பல் யார் என உடனடியாக தெரியவில்லை. எனினும் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of