பத்திர பதிவு சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை

490

தமிழகம் முழுவதும் பத்திர பதிவு சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பல லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம் உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் கணக்கில் வராத ஒரு லட்சத்து 22ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு லட்சத்து 12ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் 47ஆயிரம் ரூபாயும், நீலகிரி மாவட்டம் குன்னூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 24ஆயிரம் ரூபாயும் கைப்பற்றப்பட்டது.

திருமங்கலம் அருகே செக்கானூரணியில் 30 ஆயிரமும், சிதம்பரத்தில் 43 ஆயிரமும், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் 71 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதபோன்று நாமக்கல், அவிநாசி, செஞ்சி, கோவை என தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of