தொடரும் வெடிகுண்டு தாக்குதல் – 40 ராணுவ வீரர்கள் பலி

238

கடந்த சில ஆண்டுகளாகவே சிரியா பல வகையில் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றது, இந்நிலையில் சிரியாவின் இத்லீப் என்ற மாகாணம் தற்போது அங்குள்ள கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அந்த கிழச்சியாளர்களிடம் இருந்து அந்த மாகாணத்தை காப்பாற்ற ரஷ்ய நாடு படையினருடன் இணைந்து சிரியா ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. இது எல்லாம் ஒருபுறம் இருக்க தற்போது அங்கே பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் வேரூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள இத்லீப் மாகாணத்தின் சமாகா மற்றும் ஹவாய்ன் நகரங்களில் உள்ள 2 ராணுவ முகாம்களை குறிவைத்து பயங்கரவாதிகள் திடிரென்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 80 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதே சமயம் ராணுவ வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 50 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of