பூமியை காக்கும் திருவிழா..! 3-ஆம் கட்ட மரம் நடும் பணிகளை ஆட்சியர் அன்புச்செல்வன் தொடங்கி வைத்தார்..!

401

சத்தியம் ஃபவுண்டேஷன் மற்றும் சத்தியம் டிவியின் உன்னத முயற்சியாக பூமியை காக்கும் திருவிழாவின், மூன்றாம் கட்ட மரம் நடும் பணிகளை கடலூரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தொடங்கி வைத்தார்.

சத்தியம் பவுண்டேஷன் மற்றும் சத்தியம் தொலைக்காட்சி இணைந்து 5 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணிகள் கடந்த 7ஆம் தேதி சென்னை நீலங்கரையில் தொடங்கின.

சத்தியம் தொலைக்காட்சியின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. இதையடுத்து, நாமக்கல் மாவட்டம், லத்துவாடியில் இரண்டாம் கட்ட மரம் நடும் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கின.

இந்நிலையில் மூன்றாம் கட்ட மரம் நடும் பணிகளை கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியார் அரசு கலை கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தொடங்கி வைத்தார்.

சத்தியம் தொலைக்காட்சியின் மரக்கன்றுகள் நடும் பணி இத்துடன் முடிந்துவிடாது. அவை மரமாக வளரும் வரை பராமரிக்கப்படும் என்பதை, தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது சத்தியம் தொலைக்காட்சி.