சுஜித் சம்பவம்..! குடிநீர் வடிகால் வாரியத்தின் அசத்தல் ஆர்டர்..! ஒரே கல்லில் ரெண்டு மாங்கா..!

1990

திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், நீர் உறிஞ்சு கிணறுகளை 24 மணி நேரத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற தமிழ்நாடு குடிநீர் வாரியப் பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற குடிநீர் வடிகால் வாரியம் மக்களுக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

94 45 80 21 45 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு பொதுமக்கள் பயன்பெறலாம் என்று குடிநீர் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.

twadboardtn.gov.in என்ற இணையத்திலோ, twadboard என்ற முகநூல் வாயிலாகவோ, twadboard என்ற டுவிட்டர் கணக்கு வழியாகவோ பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம். இந்த நடவடிக்கையின் மூலம், மழை நீரும் வீணாகாமல் தடுக்கப்படும், குழந்தைகள் ஆழ்துளைக்கிணறுகளில் விழுவதும் தடுக்கப்படும்.