மேசை மீது காலை தூக்கி வைத்து சர்ச்சையை ஏற்படுத்திய பிரதமர்

455

பிரான்ஸ் அதிபர் மாளிகையில் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேசிய, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், நடுவிலிருந்த மேசை மீது கால் வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேசினார்.

பிரான்ஸ் நாட்டிலுள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இம்மானுவேல் மேக்ரானிடம் ஜோக் ஒன்றை சொல்லிச் சிரித்த போரிஸ் ஜான்சன், அங்கிருந்த மேசை மீது காலை வைத்தபடி பேசியுள்ளார்.Boris-Johnson

தற்போது இந்த காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, பிரான்ஸ் அதிபரை அவமதிக்கும் வகையில் இங்கிலாந்து பிரதமரின் செயல் அமைந்ததாக, பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of