இளம் தமிழக பாக்ஸர்களை நேரில் சந்தித்த “பாக்ஸர்” விஜய்

337

“தடம்” படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது அருண் விஜய் ‘பாக்ஸர்’ என்கிற படத்தில் நடித்து வருகின்றார்.

விவேக் இயக்க இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார், அண்மையில் இந்த திரைப்படத்திற்காக விஜய் தீவிர பயிற்சி எடுத்து வரும் வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

Arun

இவருக்கு சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’ படத்தில் வில்லனாக நடித்த ஜானி பயிற்சி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Arun-Vijay

ஜானியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வியட்நாமில் மாஸ்டர் ஜானியுடன் பயிற்சி எடுத்து வருகிறேன் என்று கூறியிருந்தார்.

Arun-Vijay-Boxer

இந்நிலையில் அருண் விஜய் அவர்கள் தமிழ் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு சென்று குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Boxer