ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..! பெற்றோர்களே உஷார்..!

867

பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி பகுதியில் வசித்து வருபவர் தர்மராஜ். இவருக்கு சசிதேவி என்ற மனைவியும், ரெங்கநாதன் என்ற 4 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் சிறுவன் ரெங்கநாதன் ஜெல்லி மிட்டாய் கேட்டு தாயிடம் அடம் பிடித்துள்ளான்.

இதனால் தாய் சசிதேவி சிறுவனுக்கு ஜெல்லி மிட்டாயை வாங்கிக்கொடுத்துள்ளார். வழவழப்பு நிறைந்த ஜெல்உருண்டை சிறுவனின் தொண்டைக் குழிக்குள் சென்று அடைத்ததில் தாயின் கண்எதிரிலேயே சிறுவன் மூச்சுத் திணறி மயங்கி விழுந்தான்.

இதனால் பதறிய தாய் சசிதேவி, மகனை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் மூச்சித்திணறி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், குழந்தைகளுக்கு இதுபோன்ற ஆரோக்கியம் இல்லாத நொறுக்கு தீனிகள் தருவதை தடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை கூறினர். தாய் கண்முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of