சேலத்தில் சிறுவன் கழுத்து அறுத்து கொலை!

401

சேலம் அம்மாபேட்டை முனிசிபல் காலனியை சேர்ந்தவர் ரமேஷ். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் ஆறுமுகம் இவன், 5-ம் வகுப்பு வரை மட்டும் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தான்.நேற்று முன்தினம் மாலை சிறுவன் ஆறுமுகம் அம்மாபேட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் கழுத்து, கை அறுக்கப்பட்ட நிலையில் ரத்தக்காயங்களுடன் மயங்கி கிடந்தான்.

இதைப் பார்த்த அங்கு விளையாடிக்கொண்டிருந்த மற்ற சிறுவர்கள், இது குறித்து ஆறுமுகத்தின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கு வந்து சிறுவனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த போது சிறுவன் ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் சிறுவனின் சாவு குறித்து வழக்குப்பதிவு செய்து அவனை யாராவது கழுத்தை அறுத்து கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணையை தொடங்கினர்.

இந்தநிலையில் அதே பகுதியில் வசிக்கும் சிறுவனின் உறவினரான தங்கராஜ் என்பவரின் மகன் பரத்குமார் (19) என்பவருக்கும், சிறுவன் ஆறுமுகத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், இருவரும் நேற்று முன்தினம் மாலை அங்கு உள்ள அரசு பள்ளி வளாகத்தில் விளையாடி கொண்டிருந்ததும் தெரியவந்தது.

இதனால் பரத்குமார் மீது போலீசார் சந்தேகம் அடைந்து அவரை பிடித்து விசாரித்தனர்.கைது செய்யப்பட்ட பரத்குமாரின் பரபரப்பு வாக்குமூலம் சிறுவன் ஆறுமுகத்தின் தலையை பிடித்து சுவற்றில் மோதியபோது அவன் மயங்கி கீழே விழுந்து உள்ளான்.

அப்போது அருகில் கிடந்த பிளேடால் ஆறுமுகத்தின் கழுத்து மற்றும் கையில் அறுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டதாக பரத்குமார் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

 

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of