சந்திரயான் 2 பற்றி கேள்வி எழுப்பிய பிராட் பிட் | Chandrayaan 2 | Brad Pit

383

வேர்ல்ட் வார், டிராய் போன்ற வித்யாசமான திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பிரபலர் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட். தற்போது அவர் நடிப்பில் ‘ஆட் ஆஸ்ட்ரா’ என்ற திரைப்படம் வெளிவரவுள்ளது. இந்த படத்தில் அவர் ஒரு விண்வெளி வீராக நடிக்கின்றார்.

இந்த நிலையில் ‘ஆட் ஆஸ்ட்ரா’ படத்தின் விளம்பரத்துக்காக பிராட் பிட் அமெரிக்காவில் உள்ள நாசாவின் தலைமையகத்துக்கு சென்றார். அப்போது சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்த விண்வெளி வீரர் நிக் ஹேக்குடன் ‘வீடியோ கால்’ மூலம் அவரிடம் பேசினார்.

இந்த உரையாடலின்போது பிராட் பிட் நிலவை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய விண்கலத்தை நீங்கள் பார்த்தீர்களா என்று கேட்டார். அதற்கு ‘‘துரதிர்‌‌ஷ்டவசமாக அதனை நான் பார்க்கவில்லை’’ என ஹேக் பதிலளித்தார். இந்த வீடியோ காட்சிகளை நாசா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of