இரட்டையர்கள் செய்த சில்மிஷம்! வித்தியாசமான தீர்ப்பு வழங்கிய நீதிபதி!

808

குழந்தைக்காக பணம் செலுத்துவதை தவிர்க்க பிரேசிலில் இரட்டை சகோதரர்களில் ஒருவரான குழந்தையின் உண்மையான தந்தை, தாமாக முன்வந்து ஒப்புக்கொள்ளவில்லை.

அவர்கள் இரட்டையர்கள் என்பதால் டிஎன்ஏ சோதனையிலும் அந்தக் குழந்தையின் தந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. தனது தந்தை யார் என்று தெரிந்து கொள்ளும் அந்த குழந்தையின் உரிமையை அந்த இரட்டையர்கள் பறிப்பதாக வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்துள்ளார்.

இரட்டையர்கள் இருவரும் மாதம் ஒன்றிற்கு தலா 60 அமெரிக்க டாலர்களை வழங்க வேண்டும் அல்லது பிரேஸிலின் குறைந்தபட்சசம்பளத்தில் 30 சதவீதத்தை வழங்க வேண்டும் என்பதே அந்த நீதிபதியின் தீர்ப்பு.

இந்த இரட்டையர்கள் ஒரே மாதிரியான உருவ அமைப்பை கொண்டுள்ளதால், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of