புல்வாமா தாக்குதலை நடத்திய தைரியமிக்க பிரதமர் – பிரேமலதா

381

தேர்தல் களம் உச்சகட்ட நிலையை எட்டிவிட்ட நிலையில் அணைத்து கட்சி தலைவர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் இன்னும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.

அவரது மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதா தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கோவையில் பிரேமலதா பிரசாரத்தில் பேசும்போது, புல்வாமா தாக்குதலை நடத்திய தைரியமிக்க பிரதமர் மோடி என்றார். பயங்கரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலை மோடி நடத்தினார் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாகிஸ்தானில் உள்ள பாலாகோட்டில் இந்திய விமானப்படை புகுந்து பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது. அதை அவர் சுட்டிகாட்டி பேசும்போது பாலாகோட் என்று சொல்வதற்கு பதில் புல்வாமா என்று கூறிவிட்டார்.

Advertisement