தடுப்பூசி போட்டா… பெண்களுக்கு தாடி வளரும்.. அதுக்கு நாங்க பொறுப்பல்ல..

3828

பெருந்தொற்று பரவலை தடுப்பதில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி நல்ல பலன் தருவது உறுதியானதால், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

பிரேசிலில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றும், அதேசமயம் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்படாது எனவும் அந்நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சனாரோ ஏற்கனவே அறிவித்துள்ளார். பெருந்தொற்று தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும், தான் தடுப்பூசி போட்டுக் கொள்ளப்போவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பைசர் நிறுவனத்தின் பெருந்தொற்று தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு நாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ கைவிரித்துள்ளார்.

தடுப்பூசி போட்டு கொள்பவர்கள் ஒரு முதலையாக மாறினால், அது உங்கள் பிரச்சினை என்றும் மனிதநேயமற்றவராகவும், பெண்களுக்கு தாடியும் வளரலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனால் பிரேசில் நாட்டு மக்கள், பெருந்தொற்று தடுப்பூசி போட்டுக் கொண்டு ஏதேனும் பக்க விளைவுகள் வந்துவிட்டால், என்ன செய்வது? தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? வேண்டாமா? என்ற பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

Advertisement