தாஜ்மஹாலில் தாய்ப்பால் புகட்டும் அறை – இந்திய நினைவுச் சின்னங்களில் இதுவே முதல்முறை!

303

ஜூலை மாதத்திலிருந்து தாஜ்மஹாலில் தாய்ப்பால் புகட்டுவதற்கான தனியறை பயணிகள் பயன்பாட்டிற்கெனத் திறந்தே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பொது இடங்களில் தாய்ப்பால் புகட்டுவதில் இந்தியர்களுக்கு இன்னும் தயக்கம் இருக்கிறது. தன்னிகரில்லாத இந்த சுற்றுலா தளத்தில், குழந்தையின் தாய் ஒருவர் தாய்ப்பால் புகட்ட சிரமப்பட்டு கொண்டிருந்ததைப் பார்க்க நேர்ந்தது.

தாய்ப்பால் புகட்டுவதற்கான அறை உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என அப்போதுதான் முடிவெடுக்கப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை உயர் அதிகாரியான வசந்த் குமார் ஸ்வர்ன்கர்.

2017-ம் ஆண்டில்  தாய்ப்பால் புகட்டிய ஒரு பெண்ணை அவமதித்ததற்காக, லண்டனின் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியக நிர்வாகம் மன்னிப்பு கோரியது.

ஸ்பெயினின் கோரல் டெல் கார்பன் நினைவுச் சின்னத்தில் தாய்ப்பால் புகட்டியதற்காக வெளியேற்றப்பட்டார் இன்னொரு பெண்மணி. இந்தியாவில் இத்தகைய சம்பவங்கள் பொது இடங்களிலும்  சுற்றுலாத்  தளங்களிலும் பல முறை ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இருக்கும் 3,600-க்கும் அதிகமான நினைவுச் சின்னங்களில் முதல் தாய்ப்பால் புகட்டும் அறை தாஜ்மஹாலில் அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of