77-ஆவது இடத்தில் இந்தியா…! – எதில்?

4336

லஞ்சம் பெறுவதற்கான அபாயம் நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 77-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

லஞ்சத்துக்கு எதிரான சர்வதேச அமைப்பான ‘டிரேஸ், 194 நாடுகளில் காணப்படும் லஞ்ச அபாயம் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான ஆய்வறிக்கையை அந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்டது.

அதில், இந்தியா 45 புள்ளிகளுடன் 77-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில் இந்தியா 48 புள்ளிகளுடன் 78-வது இடத்தில் இந்தியா இருந்தது.பாகிஸ்தான், சீனா, நேபாளம், வங்காளதேசம் ஆகிய அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா நல்ல நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் பூடான் 37 புள்ளிகளுடன் 48-வது இடத்தை பெற்றுள்ளது. டென்மார்க், நார்வே, சுவீடன் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் லஞ்சம் குறைவாக உள்ள நாடுகள் என்ற பெருமையை பெற்றுள்ளது.

Advertisement