கொரோனா – சீனாவிற்கு விமான சேவையை நிறுத்திய பிரிட்டிஷ் ஏர்வேஸ்

336

கடந்த கால வரலாற்றில் பல நேரங்களில் பல நோய்கள் உலகின் பல பகுதிகளில் உருவாகியுள்ளது. அந்த வரிசையில் தற்போது சீனாவின் வுஹான் மாகாணத்தை பிறப்பிடமாக கொண்டு உருவாகியுள்ளது நோவல் கொரோனா என்பதும் புதிய வைரஸ் இந்த நிமிடம் வரை இந்த வைரஸ் தொற்றை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கபடவில்லை.

மேலும் இந்த வைரஸ் சீனா மட்டும் இல்லாமல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட உலகம் முழுதும் 15 நாடுகளை அச்சத்தில் உறையவைத்துள்ளது.

இந்நிலையில் பரவும் இந்த நோயினை தங்கள் நாட்டிற்கு வராமல் தடுக்க உலக நாடுகள் போராடி வருகின்றன. சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு eVisa மற்றும் VaO எனப்படும் Visa On Arrival ஆகியவை மறுக்கப்பட்டுள்ளதாக மலேஷியா அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிரிட்டன் நாட்டின் பிரபல வினமான சேவை நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் சீனா செல்லும் தனது எல்லா விமானங்களையும் நிறுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of