விவசாய நிலத்தில் இருந்து மீட்கப்பட்ட வெண்கல சிலை

436

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள காடுஉத்தனப்பள்ளி கிராமத்தில், விவசாய நிலத்தை சமன் செய்யும் பணி ஜேசிபி இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது மண்ணில் புதையுண்ட நிலையில் வெண்கல சாமி சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

சம்பவம் அறிந்து வந்த தேன்கனிக்கோட்டை வட்டாச்சியர் ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் சிலையை மீட்டனர்.

அந்த சிலை10அங்குலம் உயரமும், 3.5 கிலோ எடை கொண்டதாக இருந்தது.  தொல்பொருள்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement