‘அம்பானி’-க்கு வந்த சோதனை.., விற்க தயாராகும் நிறுவனம்

252

இந்தியாவின் பெரும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி. அவரது நிறுவனம் கிருஷ்ணா- கோதாவரி ஆற்றுப்படுகையில் உற்பத்தியாகும் இயற்கை எரிவாயுவை குழாய் மூலமாக கொண்டு செல்லும் திட்டத்தை மேற்கொண்டு வந்தது.

ரிலையன்ஸ் கேஸ் டிரான்ஸ்போர்ட்டேசன் என்றழைக்கப்பட்ட இந்த நிறுவனத்தை தற்போது புரூக்பீல்டு நிறுவனம் ரூ 13,000 கோடிக்கு வாங்க இருக்கிறது.முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ செல்போன் கோபுரங்களையும் சுமார் 800 கோடி டாலருக்கு வாங்க புருக்பீல்டுநிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்த சூழலில் தற்போது அம்பானியின் கேஸ் பைப்லைன் நிறுவனத்தையும் புரூக்பீல்டு நிறுவனம் வாங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.