நிலப்பிரச்சனையில் சொந்த சகோதரியை கழுத்து அறுத்து கொன்ற சகோதரன்.

345

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நிலப்பிரச்சனையில் சொந்த சகோதரியை கழுத்து அறுத்து கொன்ற சகோதரன்.ஒகேனக்கல் அருகே சத்திரம் பகுதியை சேர்ந்த ராஐம்மாள் என்பவர்.

இவரது சகோதரர் காமராஜ் என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை வீட்டிற்கு வெளியே இருந்த ராஜம்மாளை அவரது சகோதரர் காமராஜ் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

தப்பி ஓடிய காமராஜை போலீசார் தேடி வந்த நிலையில் ஒகேனக்கல் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of