தடை செய்யப்பட்ட காற்றாடியை விற்பனை செய்த சகோதரர்கள் கைது

189

தாம்பரத்தில் தடை செய்யப்பட்ட காற்றாடியை வீட்டில் வைத்து விற்பனை செய்த சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை தாம்பரத்தில் அதிகளவில் காற்றாடி விற்கப்படுவதாக தாம்பரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் தாம்பரம் உதவி ஆணையர் அசோகன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அதன் பேரில் தாம்பரம் ரங்கநாதபுரத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட காற்றாடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக முருகன், முரளி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைந்தனர்.

 

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of