தூங்கிய அண்ணனின் கழுத்தை அறுத்த தம்பிகள்..! பதற வைக்கும் சம்பவம்

332

சென்னை ஐஸ் ஹவுஸ் அயோத்திய நகரில் 29 வது பிளாக்கில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளியான சக்திவேல் இவருக்கு இரண்டு தம்பிகள் உள்ளார்கள்.இரண்டு தம்பிகளுக்கு திருமணமான நிலையில் சக்திவேலுக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. இதனால் இவர்களுக்கு இரண்டு வீடுகள் உள்ளன இதனை பிரித்து கொள்ளவதில் பிரச்சனைகள் ஏற்ப்படுள்ளது.

தினமும் தம்பிகளின் மனைவிகளிடம் தகராறு பண்ணுவது வழக்கமாய் கொண்டுள்ளார். நேற்று குடிபோதையில் சென்று வழக்கம் போல் பிரச்சனை பண்ணிவிட்டு தனது வீட்டிற்கு சென்று தூங்கிய சக்திவேலை அவரது இரு தம்பிகள் சேர்ந்து ஆக்ஸா பிளேடால் அண்ணன் சக்திவேலின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்றுவிட்டனர்.

தகவலறிந்து சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த சக்திவேலை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்துவிட்டார். தப்பிச்சென்ற இரு தம்பிகளையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.