“ஆண்மையிழக்கச் செய்யும்..” சீனாவில் பரவும் இன்னொரு வைரஸ்..!

967

சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய வைரஸ் தொற்று, தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் மெதுவாக மீண்டு வரும் நிலையில், சீனாவில் இன்னொரு வைரஸ் தொற்று பரவி வருகிறது.

ப்ரூசெல்லா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ், கால்நடை தடுப்பூசி ஆய்வகத்தில் இருந்து பரவியதாக கூறப்படுகிறது.

ப்ரூசெல்லா வைரஸ் தாக்கப்பட்டால், உடல் வலி, குளிர் காய்ச்சல், தலை வலி, எடை குறைதல், பசியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ப்ரூசெல்லா என்ற வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டால், மரணம் ஏற்படாது. ஆனால், சிலருக்கு ஆண்மை குறைபாட்டை இந்த வைரஸ் தொற்று ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறிந்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.