கோலம் போட வந்த பெண்.. திடீரென நடந்த பயங்கரம்.. கொடூர கொலை..

388

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள ஓதவந்தான்குடி பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆனந்த ஜோதி.

இவரது மனைவி சித்ரா. இந்நிலையில், காலை வழக்கம் போல் சித்ரா கோலம் போடுவதற்காக, வீட்டிற்கு வெளியே வந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், சித்ராவை கொடூரமாக தாக்கி, கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

சித்ரா நகைக்காக கொலை செய்யப்பட்டாரா..? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா..? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.