ஜியோவை ஓடவிடத் தயாராகும் BSNL – அதிரடி சிக்சர் ப்ளேன்

1351

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பல சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. இந்த சலுகைகள் அனைத்தும் ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னரே துவங்கியது.

காரணம் ஜியோ அப்படிபட்ட பல சலுகைகளை வழங்கியது. ஜியோ டெலிகாம் துறையில் வந்த பிறகு மற்ற நிறுவனங்கள் ஆடி போய்தான் இருக்கிறார்கள். பிஎஸ்என்எல் ஜியோவுக்கு போட்டியாக பல சலுகைகளை அடுத்தடுத்து வழங்கி வருகிறது.

அந்த வகையில், வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதிக்குப் பின்னர் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி என்ற டேட்டா 3 ஜிபி ஆக உயர்த்தப்படுவதற்கு வாப்புள்ளதாக பிஎஸ்என்எல் தெரிவிக்கிறது. ஆம், சிக்ஸர் 666 என்ற புது ப்ளான் அறிமுகமகவுள்ளது.

ஏற்கனவே செயல்பட்டு வரும் ரூ.333 ப்ளான், ரூ.444 ப்ரீபெய்டு ப்ளான்னுடன் இந்த ப்ளான் வழங்கப்படவுள்ளது. சிக்ஸர் 666 ரீசார்ஜ் ப்ளானில் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்கள் இலவசம். கூடுதலாக நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படும். அதோடு 3ஜிபி டேட்டா வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of