BSNL நிறுவனம் மூடப்படுகிறதா? – அதிர்ச்சியில் BSNL ஊழியர்கள்

144
bsnl

BSNL தொலை தொடர்பு நிறுவனத்தை மூடப்போவதாக தற்பொழுது செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஜியோ நிறுவனம் வந்த பிறகு ஏர்செல்,ஏர்டெல்,வோடாபோன்,ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதில் ஏர்செல் நிறுவனம் நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் நிறுவனத்தை இழுத்துமூடிவிட்டது.

இந்த நிலையில் நெருக்கடியான சூழலில் ஏர்டெல்,ஐடியா,வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் தொலைதொடர்பு துறையை நடத்தி வருகிறது. இந்த நிலையில் BSNL நிறுவனம் கடந்த 2017 முதல் 2018 வரை மட்டும் 31 ஆயிரத்து 287 கோடி ரூபாய் வருவாய் இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் BSNL நிறுவனத்தை மூடுவது என முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

BSNL ன் இந்த நடவடிக்கையால் 54000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.