அரசு செலவில் எனது சிலைவைக்க இது தான் காரணம்? மாயாவதி

682

உத்தரபிரதேசத்தில் மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ் ஆட்சி நடைபெற்ற போது நினைவகங்கள் பல கட்டப்பட்டுள்ளனர். இந்த நினைவகங்களில் மாயாவதி மற்றும் அவருடைய கட்சி சின்னமான யானையும் இடம் பெற்றது அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.

அதுமட்டுமின்றி இந்த நினைவிடங்களை அமைப்பதில் மட்டுமே ரூ.1400 கோடி வரையில் ஊழல் நடந்துள்ளது என விசாரணையும் தொடங்கியது, பொதுமக்களின் நிதியை ஒரு கட்சியின் சிலைகளை அமைப்பதற்காக மட்டும் பயன் படுத்தக்கூடாது என்ற பொதுநல வழக்கையும் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை மேற்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, லக்னோ, நொய்டாவில் யானை சிலைகள் மற்றும் மாயாவதியின் சிலைகள் அமைக்கப்பட்டதற்கு ஆன செலவை மாயாவதியே திரும்ப செலுத்த செய்யலாம் என யோசனை தெரிவித்துள்ளது.

“மாயாவதி தனது சிலைகளிலும் கட்சி சின்னத்திலும் செலவழித்த பொது பணத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் தற்காலிகமாக கருதுகிறோம்” என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு தெரிவித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 22 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என தெரிவித்தது.

இதற்கிடையில், சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ள மாயாவதி, மக்கள் விருப்பப்படியே தனது சிலைகளை அமைத்ததாக தெரிவித்துள்ளார்.

Advertisement