காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை: மாயாவதி அறிவிப்பு

595

ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களில் நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி சத்தீஷ்கர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சியை தொடங்கிய அஜித் ஜோகியுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்தார்.

மாயாவதியின் இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், தற்போது ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என மாயாவதி கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மாயாவதி கூறுகையில், மத்தியில் தவறாக ஆட்சி செய்து வரும் பாஜக அரசை வீழ்த்தி விடலாம் என காங்கிரஸார் கர்வம் கொண்டுள்ளனர். ஆனால், மக்கள் காங்கிரஸ் ஆட்சியின் தவறையும், ஊழலையும் மறந்திருக்க மாட்டார்கள். காங்கிரஸார் தங்களை திருத்தி கொள்ள தயாராக இல்லை.

பாஜக-பகுஜன் சமாஜ் கூட்டணியை சோனியா காந்தி, ராகுல் காந்தி விரும்பினாலும், திக்விஜயசிங் உள்ளிட்ட மற்ற காங்கிரஸ் தலைவர்கள் விரும்புவதில்லை. பாஜக கட்சியை போல காங்கிரஸ் கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியை எதிர்க்க நினைக்கிறது. எனவே ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேச மாநில சட்டமன்றத்தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் எனக் கூறினார்.

Advertisement