பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு

648

பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

50 கோடி மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

மத்திய அரசு சுகாதாரம், கல்வி, விவசாயம், நீர் மேலாண்மை ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

நாட்டில் 22-வது எய்ம்ஸ் மருத்துவமனை அரியானாவில் அமைய உள்ளது.

வரும் ஆண்டில் கூடுதலாக 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் அறிவித்துள்ளனர்.

மீனவர்களின் நலனுக்காக மீன்வளத்துறை என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.

ஊரக சுகாதாரம் 98 % உறுதி செய்யப்பட்டு 5.45 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடமில்லாதவையாக மாற்றப்பட்டுள்ளன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of