சம்பளம் வாங்குவோருக்கு ஒரு நற்செய்தி: 5 லட்சம் வரை வருமான வரி கிடையாது.

416

நாட்டில் தற்போது ரூ.2.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி கிடையாது.

ரூ.2.5 – ரூ.5 லட்சம் வருவாய்க்கு 5% வரியும், ரூ.5-10 லட்சம் வருவாய்க்கு 20% வரியும், ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருவாய்க்கு 30% வரியும் விதிக்கப்பட்டு வருகிறது.

சமீப ஆண்டுகளாக வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படவே இல்லை. வருமான வரி செலுத்துகிற சம்பளதாரர்களை ஈர்க்கிற விதத்தில் தற்போதைய வருமான வரிவிலக்கு உச்சவரம்பான ரூ.2.5 லட்சம் என்பதை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் இன்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்த மந்திரி பியூஷ் கோயல் பேசியதாவது:-

பாஜக ஆட்சியில் வரி வருவாய் 6 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவிலிருந்து 12 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது. வருமான வரித்துறையை மக்கள் எளிதில் அணுகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி முறையால் வரி வருவாய் அதிகரித்துள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் 3.79 கோடியிலிருந்து 6.85 கோடியாக அதிகரித்துள்ளது. நடுத்தர மக்கள் மீதான வரிச்சுமையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தனி நபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of