மத்திய பட்ஜெட்டில் காணாமல் போன “சூட்கேஸ்”

705

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய நாடாளுமன்றத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தடைந்தார்.

குடியரசு தலைவரிடம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஒப்புதல் பெற்ற பின் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். அப்பொழுது அவர் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய கொண்டு வந்த பெட்டி வழக்கத்திற்கு மாறாக காணப்பட்டது. சிவப்பு கம்பளம் போர்த்தியபடி, அதில் அசோக சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. 

இதற்கு முன்பு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும்போது சூட்கேஸ் எடுத்து வரப்படுவது வழக்கமாக இருந்தது.கடந்த முறை மத்திய இடைக்கால நிதி அமைச்சராக இருந்த பியூஸ் கோயல் சூட்கேஸ் தான் கொண்டுவந்தார்.

ஆனால் தற்பொழுது இந்த வழக்கத்திற்கு மாறாக சிவப்பு கம்பளம் போர்த்திய பெட்டியை நிர்மலா சீதாராமன் வைத்திருந்தார். இதனால் சூட்கேஸ் கொண்டுவரும் முறை காணவில்லை.

இதனையடுத்து  மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய அமைச்சரவையின் ஒப்புதல் பெறுவதற்காக பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூடியது.

இந்த பட்ஜெட்டில் சிறப்பு அம்சங்கள் என்னென்ன இருக்கும் என்பது குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

ஜி.எஸ்.டி வரி குறைப்பு, விவசாயிகள் நலன், கல்வி, மற்றும் இரயில்வே துறை மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.