பட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..?

1628

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இந்த வெற்றியை தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

இவர் இந்தியாவின் 2 வது பெண் நிதியமைச்சர் ஆவார். முதன்முதலில் இந்திரா காந்தி பெண் நிதியமைச்சராக இருந்தார். இந்நிலையில் நிர்மலா சீதாராமன், 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில், ஒரே நாடு ஒரே கட்டமைப்பு என்ற திட்டம் இடம்பெற்றிருந்தது. அப்படியொன்றால் என்ன என்பது பலருக்கும் புரியாத புதிராக இருந்து வந்தது. இந்நிலையில் அதற்கு விளக்கம் கிடைத்து விட்டது. இந்தியாவில் 29 மாநிலங்களும், 7 யூனியன் பிரேதசங்களும் உள்ளன.

இதில் ஒரு சில மாநிலங்களில் மின்சாரம் பற்றாக்குறையாகவும், ஒரு சில மாநிலங்களில் அதிகப்படியாகவும் உள்ளது. இதனால் மின்சார தேவை ஏற்படும் மாநிலங்கள் அண்டை மாநிலங்களிடம் மின்சாரத்தை விலைக்கு வாங்கிக்கொள்கின்றன.

இந்த ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, அனைத்து மாநிலங்களுக்கான மின்சார உற்பத்தியும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்படும். இதனால் நாடு முழுவதும் மின்சாரம் ஒரே விலையில் விற்பனை செய்யப்படும்.

மேலும், மின்சாரத்தின் விலை குறையலாம் என்றும் கூறப்படுகிறது. ஒற்றை மின்கட்டமைப்புக்குள் ஒருங்கிணைக்கப்படும் போது ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்வது இன்னும் எளிதாகும் எனவும் கூறப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையிலான மின் பகிர்வு எளிமையாக்கப்பட்டு, அதன் நிர்வாகம் ஒற்றை குடையின் கீழ் வந்துவிடும்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of