மாணவிகளின் ஆடையை கழற்றி சோதனை..! முதல்வர் உட்பட 4 பேர் கைது..!

658

குஜராத் மாநிலம் பூஜ் நகரில் ஸ்ரீ சஜ்ஹானந்த் மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகள் மாதவிடாய் சமயத்தில் விடுதி சமையலறை மற்றும் கோயிலுக்குள் நுழையவும், மற்ற மாணவிகளுடன் பழகவும் தடை உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாணிவிகளில் சிலர் மாதவிடாய் காலத்தில் விடுதி சமையறைக்குள் நுழைந்ததாக, கல்லூரி விடுதி காப்பாளர் அளித்த புகாரின் பேரில், கல்லூரி முதல்வர் தலைமையில் 68 மாணவிகளின் உள்ளாடைகளை களையச் சொல்லி சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாணவிகள் புகார் அளிக்க முன்வராதபோதும், விஷயம் எப்படியோ பரவியுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட 68 மாணவிகளில் நேற்று 44 மாணவிகளிடம் மகளிர் ஆணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த மாணவிகள் விடுதியில் சேரும் போதே மாதவிடாய் காலத்தில் சமையல் அறைக்கு வரமாட்டோம், படுக்கையில் படுக்காமல் தரையில் படுப்போம் என்பது போன்ற நிபந்தனைகளில் விடுதி நிர்வாகம் ஒப்புதல் கையெழுத்து வாங்கியிருப்பதாக மாணவிகள் தெரிவித்தனர்.

இந்த விடுதியின் 3 பெண் ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கல்லூரியின் முதல்வரிடமும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், கல்லூரியின் முதல்வர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of