உலக கோப்பையில் எதிரணியை களங்கடிக்க பூம்ரா தேவை- சச்சின்

914

இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் போட்டிகளில் அடுத்தடுத்த பல தொடர்களை கைப்பற்றி தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணியில் ஆடிவரும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பூம்ரா டெஸ்ட், ஒரு நாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றார்.இவர் கடந்தாண்டே சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். ஆனால் இப்போது ஐசிசி-யின் டெஸ்ட் கனவு அணியிலும் இடம்பிடித்துள்ளார் என்றால் அவரின் ஆட்டம் எந்த அளவிற்கு இருக்கும் என சொல்லுவதற்கு வார்த்தை கிடையாது.

ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசையில் பூம்ரா முதலிடத்தில் உள்ளார், என பல பெருமைகள் குவிந்த வண்ணம் இருந்த நிலையில், கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் பூம்ரா குறித்து பேசுகையில்,

எனக்கு பூம்ராவின் வெற்றி ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனெனில் நான் அவரை கடந்த சில ஆண்டுகளாக கவனித்தும், அவருடன் சில காலங்கள் கழித்தும் உள்ளேன். தனது கடின உழைப்பாலும், பந்துவீச்சின் போது நிலைமையை புரிந்து அதற்கேற்றவாரு செயல்படும் அவரின் சமயோஜன சிந்தனையே அவரை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றுள்ளது.

தனித்துவமிக்க பவுலிங் முறையே அவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் முன்னணி வீரராக திகழ்வதற்கு முக்கிய காரணம் என்று கருதுகிறேன்.

மேலும், இந்தாண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில், பூம்ரா எதிரணி வீரர்களுக்கு தனது ஆக்ரோஷமான பவுலிங் மூலம் களங்கடிப்பார் என தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக பந்துவீசிய பூம்ராவிற்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வளிக்கப்பட்டது. அவர் இந்த மாத இறுதியில் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உள்நாட்டு தொடரில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement