சோகத்தில் முடிந்த ஒரு தலைக்காதல்..! 2 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த கொடூரம்..!

126

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள டவுன்ஷிப் 21-வது வட்டத்தை சேர்ந்தவர் சிலோமி. வடலூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர், 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

எப்போதும் குறிப்பிட்ட பேருந்தில் மட்டும் பணிக்கு செல்வதால், பேருந்து நடத்துநருடன் சிலோமிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதனை தவறாக புரிந்துக்கொண்ட அவர், சிலோமியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

இதனை அறிந்துக்கொண்ட அந்த பெண், பேருந்து நடத்துநரிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த நடத்துநர், சிலோமி பணிபுரியும் அலுவலகத்திற்கு சென்று அவர் மீது பொட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்தார்.

நெருப்பில் எரிந்தப்படி கதறி துடித்த சிலோமியை சக பணியாளர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும், தப்பியோடிய நடத்துநரை மடக்கிப்பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of