”பஸ் டே” கொண்டாட்டம் – 9 மாணவர்கள் சஸ்பெண்ட்

474

சென்னையில் பேருந்து தினம் கொண்டாடிய புதுக் கல்லூரி(New College) மாணவர்கள் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடுவதாக கூறி அரசு பேருந்து மேற்கூரையின் மீது ஏறி பாடியும் நடனம் ஆடியும் பொதுமக்களுக்கு இடையூறு அளித்தனர். இந்த நிலையில் அந்த 9 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் நேற்று பூந்தமல்லியிலிருந்து அண்ணா சாலை செல்லும் 25 ஜி பேருந்தில் பயணிகளுக்கு இடையூறு அளித்த புதுக்கல்லூரி மாணவர்கள் மீது அக்கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கையின் படி 9 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தீவிர விசாரணைக்கு பிறகு மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of