அரசு குளிர்சாதன பேருந்து கட்டணம் குறைப்பு

292
bus-fare

அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தால் இயக்கப்படும், குளிர்சாதன படுக்கை வசதி பேருந்துகள், கிளாசிக் மற்றும் சாதாரண படுக்கை வசதி கொண்ட பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அரசு பேருந்துகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டண விகிதம் தனியார் பேருந்தை விட அதிகமாக இருந்ததால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் பல வழி தடங்களில் குளிர்சாதனப் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது. பின்னர் பேருந்து கட்டணத்தை குறைக்க போக்குவரத்து நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்ததின் அடிப்படையில் திங்கள் முதல் வியாழன் வரை பயணிக்க கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

சேலம் – சென்னை புதிய கட்டணம் 655 ரூபாய்

கோவை – சென்னை புதிய கட்டணம் 975 ரூபாய்

கோவை – பெங்களூரு புதிய கட்டணம் 725 ரூபாய்

சென்னை – மதுரை புதிய கட்டணம் 880 ரூபாய்

சென்னை – தேனி புதிய கட்டணம் 970 ரூபாய்

சென்னை – திருநெல்வேலி புதிய கட்டணம் 1,145 ரூபாய்

சென்னை – திருச்சி புதிய கட்டணம் 635 ரூபாய்

பெங்களூர் – நாகர்கோவில் புதிய கட்டணம் 1,345 ரூபாய்

சென்னை – மைசூர் புதிய கட்டணம் 965 ரூபாய்

இதேபோல், கிளாசிக் மற்றும் சாதாரண படுக்கை வசதி கொண்ட பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்று தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.