சாலையில் ஏற்பட்ட புதைகுழி – பஸ் கவிழ்ந்து விபத்து | China

316

சீனாவில் கிங்காய் மாகாணத்தின் தலைநகரான உள்ள ஜினிங்கில் என்ற இடத்தில, செஞ்சிலுவை சங்கத்தின் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை வாசலில் ஒரு பேருந்து நிற்கும் இடமும் அமைந்துள்ளது, இந்த பேருந்து நிறுத்தத்தில் கடந்த திங்கள்கிழமை மாலை 5.30 மணி அளவில், ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அந்த சாலையில் ஒரு மிக பெரிய புதைகுழி உருவானது, அந்த சமயத்தில் அங்கு வந்த அந்த பேருந்து அந்த பெரிய புதைகுழியில் விழுந்தது. இதை சற்றும் எதிர்பாராத பேருந்தினுள் இருந்த மக்கள், செய்வது அறியாது கூச்சல் இட்டனர். இந்த புதைகுழியில் அந்த பேருந்து மட்டும் இன்றி அங்கு பேருந்துக்காக நின்றுகொண்டிருந்த சில பொதுமக்களும் அந்த புதைகுழியில் விழுந்தனர்,

சம்பவம் அறிந்து உடனடியாக வந்த மீட்பு குழுவினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அங்கிருந்த மக்களை மீட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர், மேலும் 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்வை போலவே இதற்கு முன்பு இரு முறை விபத்துகள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.