தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான கணினி முன்பதிவு மையம் திறப்பு – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

579

தீபாவளி பண்டிகையை ஓட்டி இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான சிறப்பு கணினி முன்பதிவு மையத்தினை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

தீபாவளி பண்டிகை வருகிற 6ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 3 ஆம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்னையின் 6 பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இதனையொட்டி இந்த பேருந்துகளுக்கான சிறப்பு கணினி முன்பதிவு மையங்களை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

கோயம்பேடு, பூவிருந்தவல்லி, தாம்பரம், (ரயில் நிலையம்), தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்துநிலையம், கே.கே.நகர், மாதவரம் உள்ளிட்ட ஆறு இடங்களில் இருந்து மொத்தம் 11,367 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்த பேருந்துகளில் செல்ல பொதுமக்கள் எளிதில் முன்பதிவு செய்துகொள்ள
கோயம்பேட்டில் 26 மையங்களும், தாம்பரம் சானிடோரியத்தில் 2 மையமும், பூந்தமல்லி மற்றும் மாதவரத்தில் தலா 1 மையம் என மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதே போல பொதுமக்களுக்கான அறிவிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பேருந்தில் எடுத்து செல்லக்கூடாது என அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர்.

Advertisement