ஆதார் சேவையை பயன்படுத்த தலா ரூ.20 கட்டணம்

888

செல்போன் சிம்கார்டு வழங்குதல் உள்பட பல்வேறு சேவைகளுக்கு வாடிக்கையாளரின் அடையாளம் மற்றும் முகவரியை உறுதிப்படுத்த ஆதார் சேவையை வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன.ஆதார் பதிவின்போது அளிக்கப்பட்ட ‘பயோ மெட்ரிக்’ ஆதாரங்களை மின்னணு முறையில் உறுதிப்படுத்திக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிப்பது வர்த்தக நிறுவனங்களுக்கு எளிதாக இருக்கிறது.

இந்நிலையில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மின்னணு முறையிலான ஆதார் சேவையை பயன்படுத்துவதற்கு ரூ.20 (வரிகள் உள்பட) பரிமாற்ற கட்டணமாக செலுத்த வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளது.

இருப்பினும் அரசு அமைப்புகள்  தபால் துறை வங்கிகள் ஆகியவற்றுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of