50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபரை இறக்கிவிட்டு கொள்ளையார்கள் தப்பியோட்டம்

1401
kanchipuram

காஞ்சிபுரத்தில் 50 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட பிரபல தொழிலதிபரை மீட்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதை அடுத்து, தொழிலதிபரை கடத்தல் காரர்கள் திருவண்ணாமலையில் இறக்கிவிட்டு விட்டு தப்பியோடினர்.

காஞ்சிபுரத்தில் காஞ்சி சூப்பர் மார்க்கெட் என்னும் பல்பொருள் அங்காடி பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடியில் நூற்றுக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு 12 மணியளவில் கடையின் உரிமையாளர் பசூல் ரகுமான் என்பவர் கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்றனர். செல்லும் வழியில் அவருடைய செல்பேசியிலிருந்து அவருடைய மகனுக்கு தொடர்பு கொண்ட கடத்தல் காரர்கள் 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், 3 மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினரைக் தீவிரமாக தேடும் பணியில் முடுக்கி விட்டனர். மேலும் டிஐஜி தேன்மொழி தலைமையில் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களும், காவலர்களும் தீவிரமாக தேடுவதை அறிந்த கடத்தல் கும்பல்.

பசூல் ரகுமானை திருவண்ணாமலை மாவட்டம் எல்லையில் இறக்கி விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.