அரவக்குறிச்சி உட்பட தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல்

226

தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல், லோக்சபா தேர்தலின் 7வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவுடன் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறும். தேர்தல் முடிவுகள், வரும் 23ம் தேதி, லோக்சபா தேர்தல் முடிவுடன் சேர்ந்தே வெளியாகும்.

தமிழகத்தில், 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் மேலும் காலியாக இருந்த சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of