மேகதாது அணை குறித்து பேச அழைக்கும் கர்நாடகம்

532

மேகதாது அணை திட்டம் குறித்து பேச நேரம் ஒதுக்குமாறு தமிழக அரசுக்கு, கர்நாடகா கடிதம் எழுதியுள்ள நிலையில், பேச்சுவார்த்தை வாய்ப்பே இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் எழுதியுள்ள கடிதத்தில், மேகதாது பிரச்சனையை நட்பு ரீதியாக பேசித் தீர்க்கவே கர்நாடக அரசு விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

அணை குறித்து விரிவாக பேச தங்களுக்கு நேரம் ஒதுக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.

கர்நாடக அரசின் இந்த அழைப்பு குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.