CAA-க்கு எதிராக மார்ச் 23ஆம் தேதி முதல் விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்படும் – சீதாராம் யெச்சூரி

252

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மார்ச் 23ஆம் தேதி முதல் விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய குடியுரிமை சட்டத்தால் ஏற்படும் தீமைகளை குறித்து வீடு வீடாக சென்று விளக்கி கூறி, பொதுமக்களின் ஆதரவை திரட்ட உள்ளதாக கூறினார். இயற்கை பேரிடர் போன்ற காலங்களில் ஏழை எளிய மக்கள் ஆவணங்கள் இழந்தால், அவர்கள் குடியுரிமையை பெற முடியாத நிர்பந்தத்திற்கு ஆளாவார்கள் என்று தெரிவித்தார்.

நாட்டில் வாழும் அனைத்து பழங்குடியினரும் அரசு கேட்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் யெச்சூரி தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of