புதுச்சேரியில் மழை காலத்திற்கு முன்னதாக ஏரி, குளங்களை தூர்வார முடிவு

272
narayanasamy

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அம்மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.

அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் நாராயணசாமி, மழை காலத்திற்கு முன்னதாக ஏரி, குளங்களை தூர்வாரி, அந்த மணலை மக்களுக்கு இலவசமாக வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

முன்னதாக பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளுக்கு தகுதி உடையவர்களை தேர்வு செய்வதற்கான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி சட்டப்பேரவையில் வளாகத்தில் நடைபெற்றது.

முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் துறை இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மூன்று விருதுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியுடையவர்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here