புயலால் சேதமடைந்த கேபிள் ஒயரை சரி செய்து கொண்டிருந்த கேபிள் டிவி ஊழியர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு

267

திருக்கோகரணம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அந்த பகுதியில் கேபிள் டிவி ஊழியராக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்தார். இந்நிலையில் கஜா புயலால் கேபிள் ஒயர்கள் ஆங்காங்கே அருந்து கிடந்தது. அதை சீர் செய்யும் பணியில் ஜெயக்குமார் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கேபிள் ஒயர் எதிர் பாராதவிதமாக அருகிலிருந்த மின்சார கம்பியில் விழுந்தது. அப்போது கேபிள் ஒயரை பிடித்துக் கொண்டிருந்த ஜெயக்குமார் மீது மின்சாரம் தாக்கியது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த ஜெயக்குமாரின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி கேபிள் ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.