ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கை இன்று தாக்கல்!!

927

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சி.ஏ.ஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது

ஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து ரபேல் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் விதிமுறைகள் மீறப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதனால் அரசு கருவூலத்துக்கு இழப்பு ஏற்பட்டதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஒப்பந்தம் குறித்து தணிக்கை செய்த மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி ராஜீவ் மகரிஷியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையில், தேசத்தின் பாதுகாப்பு கருதி விலை குறித்தான தகவல்கள் வெளியிடப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் அறிக்கை தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement