மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை !

75

கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக மேற்குவங்க அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், காவல்துறை அதிகாரி ராஜீவ் குமார் காவல் துறை அதிகாரிகளுக்கான பணி விதிமுறைகளை மீறியதாக தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் காவல் ஆணையர் பங்கேற்றது பணி விதிமுறைகளுக்கு மாறானது என குறிப்பிட்டுள்ளது. எனவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடத்திய 3 நாள் போராட்டத்தில், காவல் ஆணையர் ராஜீவ்குமாரும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.