ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் அழைப்புவிடும் சோனியா காந்தி

801

அனல் பறக்கும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில், இதுவரை 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வருகிற 19 ஆம் தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெறும். இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இவர்களை போலவே அரசியல் கட்சிகளும் தங்கள் வெற்றிக்கான ஓட்டுகளை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். வாக்கு எண்ணிக்கையை வருகின்ற மே 23 ஆம் தேதி நடைபெறும்.

இந்த நிலையில், வருகிற 23 ஆம் தேதி மாலை டெல்லியில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. அவர் கூட்டத்தில் பங்கேற்கும்படி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of