சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய நவீன கேமராக்கள் – கண்காணிப்பு பணி தீவிரம்

334

நீலகிரி மாவட்டம், குன்னூரில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய இரண்டு நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.

குன்னூர் அருகே உள்ள கோடமலை மற்றும் அட்டடி டீ எஸ்டேட் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்குள்ள வனப்பகுதியில் இருந்து கடந்த சில தினங்களாக, சிறுத்தை ஒன்று வெளியேறி பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தெரிகிறது.

இதனிடையே, கடந்த ஒன்றாம் தேதி தேயிலை தோட்டம் வழியாக குட்டிகளுடன் சென்ற சிறுத்தை, அங்கு தேயிலை பறித்துக்கொண்டிருந்த மேகலா என்பவரின் காலை கவ்வியுள்ளது.

இதில், பலத்த காயமடைந்த மேகலா குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், தொழிலாளர்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க திட்டமிட்ட வனத்துறை அதிகாரிகள், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிய வனப்பகுதியில் 2 நவீன கேமராக்களை பொருத்தி, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement